பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்!
பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்! LIC அறிமுகப்படுத்தியுள்ள கன்யாடன் பாலிசி பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம். கன்யாடன் திட்டம் : இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று இந்த LIC – ன் கன்யாடன் பாலிசி. இத்திட்டத்தில் குழந்தைக்கு 1 வயது இருக்கும் போதே சேரலாம். குழந்தையின் எதிர்கால தேவைகளான கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும். இதில் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செலுத்தலாம். மேலும் 13 -25 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் உண்டு. இந்த பாலிசி திட்டத்தில் கணக்கு தொடங்கிய நபர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் பாலிசியை குடும்பத்தினர் செலுத்த தேவையில்லை. மேலும் இறப்பு பலனாக குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மேலும் 25 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு ரூ. 27 லட்சம் நாமினிக்கு கிடைக்கும்.