உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிவிட்டால் என்ன செய்யலாம்.. உடனே செய்ய வேண்டியது என்ன?
சென்னை: போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். சென்னையில் தற்போது போலி ஆவணம் மூலம் ரூ.84 லட்சம் நிலத்தை மோசடி செய்த தாய்- மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே உட்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நடைமுறையின்கீழ் நிலங்களை விற்பவர்கள் அது சார்ந்த வட்ட அலுவலகங்களுக்கு சென்று, தான் விற்க விரும்பும் நிலம், சொத்துகளின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொள்கிறார்கள். அதன்பின் ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதள வழியில் தொடர்புடைய சார் பதிவகம் மற்றும் நில உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.. அதன் பின்னரே, நில உரிமையாளர் தனது நில பரிவர்த்தனையை சார்பதிவகம...