இனி கூடுதலாக பீருக்கு ரூ.40, மதுபானத்திற்கு ரூ.90.. மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு
இனி கூடுதலாக பீருக்கு ரூ.40, மதுபானத்திற்கு ரூ.90.. மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், மதுபான பெட்டிக்கு 90 ரூபாயும் அரசுக்கு கூடுதல் கட்டணமாக செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்காக, 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தாமல், வேறு சிலருக்கு அளித்து வந்த விவரம் முதலமைச்சர் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மதுபான வகைகளுக்கு கூடுதல் கட்டணம் விதித்து, அரசு விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மது வகைக்கு பெட்டிக்கு 90 ரூபாயும், பீர் வகைக்கு 40 ரூபாய், ஒயின் வகைக்கு 20 ரூபாய் வ...