இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா?

இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) சேவைகளை எளிமையாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுவந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட போகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.

டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் வாங்குவதை கனவாக கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்திருக்கிறார். பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 (Passport Seva Programme Version 2.0) கீழ் விரைவில் இ-பாஸ்போர்ட் (E-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை மிகவும் அவசியமானதாக பார்க்கிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்போர்ட் நடைமுறைகளை மாற்றி, மக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இ-பாஸ்போர்ட் வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 என்னும் சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவையின் கீழ் நாட்டு மக்களுக்கு விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்திய மக்களுக்கு எளிமையாக அணுகக்கூடிய வகையில், வெளிப்படையாகவும், நம்பகமாகவும் அதே நேரத்தில் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறும், பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

Gizbot Tamil
Tamil » News
இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா?
By Harihara Sudhan
Updated: Monday, June 26, 2023, 18:16 [IST]
இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) சேவைகளை எளிமையாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுவந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட போகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ADVERTISEMENT

டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் வாங்குவதை கனவாக கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்திருக்கிறார். பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 (Passport Seva Programme Version 2.0) கீழ் விரைவில் இ-பாஸ்போர்ட் (E-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

What is E-Passports in India
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை மிகவும் அவசியமானதாக பார்க்கிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்போர்ட் நடைமுறைகளை மாற்றி, மக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இ-பாஸ்போர்ட் வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 என்னும் சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவையின் கீழ் நாட்டு மக்களுக்கு விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்திய மக்களுக்கு எளிமையாக அணுகக்கூடிய வகையில், வெளிப்படையாகவும், நம்பகமாகவும் அதே நேரத்தில் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறும், பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு, இ-பாஸ்போர்ட் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிமையாகவும், வெளிநாட்டு பயணங்கள் குழப்பமில்லாமலும் நடக்கும். இந்த சேவையை வழங்க இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இருக்கும் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலர்கள் தயார இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், விரையில் இ-பஸ்போர்ட் வழங்கப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?: இ-பாஸ்போர்ட் என்பது, முன்பு பயன்படுத்தி வந்த பாஸ்போர்ட்களை போலல்லாமல், சிப் பொருத்தப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம், உங்களது தனிப்பட்ட தகவல்கள் டிஜிட்டலாக்கப்படும். உங்களது, வெளிநாட்டு பயணங்கள், டிக்கெட் விவரங்கள் உள்ளிட்டவை வெரிபிகேஷன் செய்யப்படுவதில் சிக்கல் இருக்காது. அதேபோல, உங்களது ஃபிங்கர்-பிரிண்ட், பேஸ்-ஐடி உள்ளிட்ட அடையாளங்கள், இ-பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து எங்கும் சென்றுவிட முடியாது. அதேபோல பாஸ்போர்ட் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ, வேறு யாராவது எடுத்துக் கொண்டாலோ அதை திருப்பப்பெறுவது மிக எளிதாக மாறிவிடும். இதனால் வெளிநாட்டில் வேலைக்கு சென்று சிக்கிக்கொள்ளும் மக்களை எளிதாக அடையாளம் காண முடியும். இப்படி பல்வேறு நன்மைகள் உள்ளன. அதேபோல புதிய பாஸ்போர்ட் வாங்க எடுக்கும் கால நேரமும், இந்த இ-பாஸ்போர்ட்கள் மூலம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விbம5vvர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்