எல்ஐசி-யின் ஜீவன் உமங்
எல்ஐசி-யின் ஜீவன் உமங்
எல்ஐசி-யின் ஜீவன் உமங் திட்டமும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். எனினும் முதிர்வு தொகையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதோடு நாமினிக்கும் சலுகைகள் உண்டு. குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும் , சுய தொழில் புரிபவர்களுக்கும் இந்த திட்டம் ஏதுவானதாக இருக்கும். ஏனெனில் ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் கிடைக்கும். ஆக இது சிறந்த ஓய்வூதிய திட்டமாகவும் கருதப்படுகிறது.
எல்ஐசி-யின் பிரதான் மந்திரி வய வந்தனா
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும்.
பிரதான் மந்திரி வய வந்தனா - வட்டி விகிதம்
எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிராதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவணை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதியம் பெற அனுமதி உண்டு.
கடன் வாங்க முடியுமா?
இந்த திட்டத்தினை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். தற்போது வட்டி விகிதம் 7.66% ஆக வழங்கப்படுகிறது. இது வங்கி டெபாசிட்டுக்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த திட்டத்தில் இடையில் வெளியேறினால் 2% அபராதம் விதிக்கப்படுகிறது. அதுவும் தவிர்க்க முடியாத அவசர சிகிச்சைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
Comments
Post a Comment