கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்!
கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்!
கார் பாலிசியை புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
கார்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் இன்சூரன்ஸும் ஒன்று. இது இல்லாத வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. விபத்து போன்ற கசப்பான அனுபவங்களின்போது ஏற்படும் பெரும் இழப்புகளை சரிகட்ட காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன. இதனால்தான் இந்திய போக்குவரத்து சட்டம் வாகன காப்பீட்டை கட்டாயம் என்கின்றன.
இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், விபத்து போன்ற நிகழ்வுகளின்போது ஏற்படும் இழப்புகள் தனி நபரால் ஈடு செய்ய முடியதவையாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் உதவும் விதமாக உருவாக்கப்பட்டதே காப்பீட்டு திட்டங்கள். எனவேதான் காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பதும், அதனை உரிய நேரத்தில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என கூறப்படுகின்றது.
இத்தகைய ஓர் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும்போது நாம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். மிக முக்கியமான 7 பாயிண்டுகள் பற்றிய விபரங்களைக் காணலாம், வாங்க.
சரியான நேரத்தில் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிப்பது அவசியம்:
பாலிசி காலாவதி ஆவதற்குள் அதனை புதுப்பிப்பது மிகுந்த அவசியமாது. இந்தியாவில் காப்பீட்டு பாலிசி இல்லாமல் காரை இயக்கினால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படுகின்றது. இதே குற்றத்தை தொடர்ச்சியாக செய்யும்பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் ரத்து, சிறை தண்டனை மற்றும் ரூ. 4 அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த மாதிரியான நடவடிக்கையை தவிர்க்க பாலிசியை உரிய நேரத்தில் புதுப்பிப்பது அவசியமானதாக இருக்கின்றது. அதேவேலையில், ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி முடிந்த பின்னரும் 30 முதல் 90 நாட்களுக்குள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம் என சலுகையை வழங்குகின்றனர். ஆனால், இந்த காலகட்டத்தை கணக்கில் காட்டி இழப்புகளுக்கு ஈட்டை கேட்க முடியாது. எனவேதான் உரிய நேரத்தில் காப்பீட்டை புதுப்பிப்பது அவசியமானது என்கின்றனர்.
பாலிசி பிளானை அப்டேட் செய்யுங்கள்:
பாலிசியை புதுப்பிக்கும்போது அதனை அப்டேட் செய்வது நல்லது. இவ்வாறு செய்யும்போது பல்வேறு பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, விரிவான புதிய திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, சில தேவையற்ற கட்டணங்களில் இருந்து விலக்கு பெற முடியும். ஆனால், இவ்வாறு செய்வதனால் பாலிசியின் பிரீமியம் சற்று அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதும் விற்பனையாளர்கள் பலர் தங்களிடம் வாங்கப்படும் பொருட்களுக்கு சில பாயிண்டுகளை சிறப்பு சலுகையாக வழங்குகின்றனர். அந்தவகையில், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நோ க்ளைம் போனஸை தங்களின் பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்றது. காப்பீட்டினை தவறாமலும், எந்தவொரு க்ளைமிற்கும் விண்ணிப்பிக்காமலும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நோ க்ளைம் போனஸ் எனும் பாயிண்டுகளை வழங்குகின்றது.
இந்த பாயிண்டுகளை காப்பீடு புதுப்பிப்பின்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, நாம் பாலிசிக்காக செலுத்தக் கூடிய கட்டணத்தில் இருந்து கணிசமான தொகையை சலுகையாகப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய பிரீமியம் தொகையை குறைக்க இது ஓர் நல்ல வழியாகும். ஆகையால், ஒரே நிறுவனத்திடமும், இடைவிடாமலும் பாலிசியை புதுப்பிப்பது மிக சிறப்பான பலன்களை வழங்கும். 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆட் -ஆன்களை சேர்த்தல்:
காப்பீட்டு நிறுவனங்கள் சில இப்போது ஆட்-ஆன் எனும் மதிப்புக்கூட்டு சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பூஜ்ஜிய தேய்மானம், பயணிகளுக்கான பாதுகாப்பு, க்ளைம் போனஸ் புரடெக்சன், ரோட் சைடு அசிஸ்டன்ஸ் போன்ற பல்வேறு ஆட்-ஆன்களை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் உங்களுக்கு எது தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து அதை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது உங்கள் பாலிசியை அதிகரிக்கச் செய்யலாம். சில காப்பீட்டாளர்கள் தங்களின் ஆட்-ஆன் சேவைகளை சில நேரங்களில் சலுகையாக வழங்குவதுண்டு.
ஐடிவி மதிப்பை மட்டும் குறைச்சிடாதீங்க:
விபத்தின் போது பெருத்த சேதத்தை சந்தித்து வாகனம் பயனற்றதாக மாறிவிட்டது அல்லது கார் திருட்டு போய்விட்டது என்பதுபோன்ற நேரங்களில் இந்த இழப்பிற்கான உச்சபட்ச இழப்பீட்டைப் பெற வேண்டுமானால் உரிய மதிப்பீட்டில் காரை காப்பீடு செய்வது அவசியமாக உள்ளது. ஓர் வாகனத்தின் புதிய தன்மைக்கு ஏற்ப பிரீமியம் விதிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் காப்பீட்டை புதுப்பிக்கும்போதும் காப்பீட்டாளர்கள் வாகனங்களை உரிய ஆய்விற்கு உட்படுத்தி, அதன் தத்திற்கு ஏற்ப ஐடிவி மதிப்பை (Insured Declared Value) வழங்கி அதற்கான பிரீமியத்தை வசூலிக்கின்றனர். சில நேரங்களில் இந்த தொகை அதிகமானதாக இருக்கலாம். இதை குறிப்பதற்காக சிலர் தங்களின் வாகனங்களை தரத்தைக் குறைத்துக் காண்பிக்கின்றனர். இதன் விளைவாக பெருத்த சேதங்களின்போது குறைவான மதிப்பிலேயே இழப்பீடு கிடைக்கின்றது. ஆகையால், வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் இந்த விஷயத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது.
இதுபோன்று இன்னும் பல விஷயங்களை பாலிசி புதுப்பித்தலின்போது நாம் கவனிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இது நமக்கு கூடுதலான பலன்களை வழங்க உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment