அடேங்கப்பா.,அடிச்சது ஜாக்பாட் – இனி துட்டு கொட்ட போகுது! மிஸ் பண்ணாம இதை பாருங்க!!
அடேங்கப்பா.,அடிச்சது ஜாக்பாட் – இனி துட்டு கொட்ட போகுது! மிஸ் பண்ணாம இதை பாருங்க!!
கொரோனா காலகட்டத்தில், தொடங்கப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டித்துள்ளதாக HDFC வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறப்பு FD திட்டம்:
தனியார் கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தை நீட்டித்துள்ளது. சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி எனப்படும் இந்த சிறப்பு FD திட்டம் மே 18, 2020 முதல் வங்கியால் வழங்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இந்தத் திட்டம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30, 2022 அன்று காலாவதியாக இருந்தது. ஆனால் HDFC வங்கி இந்தத் திட்டத்தை மார்ச் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
மேலும், சிறப்பு FD திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் “SBI Wecare” டெபாசிட் திட்டம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று SBI தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் HDFC வங்கியும் நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் சிறப்பு FD திட்டங்களில் கூடுதாக 0.5% வட்டியை பெறுகின்றனர். இருப்பினும், இந்த சிறப்பு FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் சேர்த்து இன்னும் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், சீனியர் சிட்டிசன் FD திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75% வட்டியை HDFC வங்கி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment