எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்
 

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்
 

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம். இந்த திட்டம் ஒரு எண்டோவ்மெண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், இறப்பு பலனாக 10% SA பாலிசி முதிர்வு காலம் வரையில் கிடைக்கும். இது மாதாமாதம் ஒரு வருமானமாகவே கிடைக்கும்.
பாலிசி முதிர்வு காலம் வரும்போது முதிர்வு தொகை கிடைக்கும். (தொடர்ந்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியதில்லை).




எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்

இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். வாழ் நாள் முழுவதும் இந்த திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கும் இந்த திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இது நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு நல்ல திட்டமாகும்.

எல்ஐசி-யின் இந்த சூப்பரான ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு.
 
ஜீவன் சாந்தி திட்டத்தினை யாரெல்லாம் எடுக்கலாம்?

எல்ஐசி-யின் இந்த பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்று வரையரை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம்.

எல்ஐசி-யின் ஜீவன் சாந்தியில் வருமானம்?

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடான 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும்.

ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.

ஜீவன் சாந்தியில் கடன் சலுகை

நீங்கள் உங்கள் பாலிசியை தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும்.

உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும்.

வரி சலுகை உண்டா?

இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் எடுப்பவர் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதந்தோறும் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டாலும் கூட, வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு..


Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்