மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம் – மாதம் ரூ.18,500 பெறலாம்… உடனே சேருங்கள்!
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம் – மாதம் ரூ.18,500 பெறலாம்… உடனே சேருங்கள்!
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவும் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு மாதம் ரூ.18,500 கிடைக்கும் இது குறித்து இப்பதிவில் காண்போம்.
ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உதவும் வகையில் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை பொதுத்துறை வங்கியான எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் நபர்களுக்கு 60 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். மேலும் நேரடியாகவே ஆன்லைன் வாயிலாகவும் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேர்வதற்கான காலம் கடந்த மார்ச் 31, 2020 என இருந்த நிலையில் தற்போது மார்ச் 31, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலீடு தொகை அதிகபட்சமாக 7.5 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். திருமணமான தம்பதியர்கள் இருவரும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேர விரும்பினால் ஒவ்வொருவரும் தனித்தனியாக ரூ.15 லட்சம் கணக்கில் ரூ.30 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில் வருடாந்திர வட்டி 7.40 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வட்டித்தொகையை 12 மாதங்களுக்கு சரிபாதியாக பிரிக்கும் போது ரூ.18500 கிடைக்கிறது.
இந்த வட்டித்தொகையே முதலீட்டாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருவர் மட்டும் முதலீடு செய்தால் 7.40 சதவீத வட்டியில் ரூ.15 லட்சத்துக்கு ரூ.111000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டமாக உள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விரைந்து இத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு 10 ஆண்டுகள், முதிர்ச்சிக்கு பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
Comments
Post a Comment