5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்.. சாமானிய மக்களுக்கு என்னவெல்லாம் பாதிப்பு..?!

5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்.. சாமானிய மக்களுக்கு என்னவெல்லாம் பாதிப்பு..?!

இந்திய நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குச் செப்டம்பர் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு உட்படப் பல்வேறு முயற்சிகளைச் செய்த நிலையிலும் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக வங்கி, ஐஎம்எ போன்ற பல நிதியியல் அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியைக் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் மாத பணவீக்கம் கூடுதல் பாதிப்பை இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் பணவீக்கம் உயர முக்கியமான காரணம் என்ன..? பணவீக்க உயர்வால் சாமானிய நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..?
சில்லறை பணவீக்கம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 மாத உயர்வில் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது, மேலும் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆர்பிஐ தோல்வி

3 காலாண்டுகளாக அதாவது 9 மாதங்களாக நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான இலக்கான 6 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. இதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்பிஐ தோல்வி அடைந்துள்ளது.

விளக்க அறிக்கை

இதனால் மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி விளக்க அறிக்கை கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. செப்டம்பர் பணவீக்கத்தைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

உணவு பணவீக்கம்

சில்லறை பணவீக்கத்தில், உணவு பணவீக்கம் சுமார் 50 சதவீத பங்கு வகிக்கும் நிலையில் செப்டம்பர் மாத உணவு பணவீக்கம் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இதன் அளவு 7.62 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்கள் விலை உயர்வு

உணவு பணவீக்கம் உயர்வு என்பது நாட்டில் அனைத்து விதமான உணவு பொருட்களின் விலை உயர்வைப் பிரதிபலிக்கிறது. காய்கறி, பழங்கள், இறைச்சி, பருப்பு, அரிசி உட்பட அனைத்தும் இதில் அடக்கும்.
விலைவாசி

தென்னிந்தியப் பகுதிகளை விடவும் வட இந்தியாவில் காய்கறி, பழங்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, போதுமான மழை இல்லாத காரணத்தாலும், அதிகப்படியான போக்குவரத்து செலவுகளாலும் இந்த நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்பிஐ ரெப்போ விகிதம்

ஒருபக்கம் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை 1.90 சதவீதம் வரையில் உயர்த்திய கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, மறுபுறம் நடுத்தர மற்றும் சாமானிய மக்களை நேரடியாகவும், அதிகமாகவும் பாதிக்கும் உணவு பணவீக்கம் 5 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது.

ஈஎம்ஐ மற்றும் உணவுப் பொருட்கள் விலை

இதனால் மக்களின் பெரும்பகுதி வருமானம் ஈஎம்ஐ மற்றும் அதிகரித்துள்ள உணவுப் பொருட்களுக்கு மட்டுமே அதிகப்படியாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.

ஒட்டுமொத்த பாதிப்பு

மேலும் செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை, சுரங்கம், மின்சாரம், எரிபொருள் ஆகிய அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் பிற பொருட்களின் விலையும் அதிகரித்து நடுத்தர மக்களைப் பாதிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை

இதற்கிடையில் OPEC+ அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது உற்பத்தி மற்றும் ரீடைல் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் அக்டோபர் மாதமும் சில்லறை பணவீக்கம் அதிகரிக்க அல்லது தொடர்ந்து உயர்வான நிலையில் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்