Post Office சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்துள்ளோர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

Post Office சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்துள்ளோர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனையடுத்து தற்போது சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்:
இந்தியாவில் தற்போது நிலவும் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நேரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எப்போதும் நாட்டில் நிலவும் பண வீக்கத்தை பொறுத்து ஆண்டுதோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதனையடுத்து மொத்த வட்டி விகிதம் 4.40% ஆக அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 1ம் தேதி முதல் ரெப்போ வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. அதே போல போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் உயர்ந்துள்ளது. மேலும் 
1) கிசான் விகாஸ் பத்ரா ,

 2) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்,

மாதாந்திர வருமானக் கணக்கு திட்டம் மூன்று ஆண்டுகளுக்கான கால வைப்புத் திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதம் 10-30 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல 2 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு தற்போது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து 3 ஆண்டு காலத்திற்கான வட்டி 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.8 சதவீதமாக உள்ளது. மேலும் ஐந்தாண்டு கால டெபாசிட் திட்டம் தொடர் வைப்புத்தொகை ஆகியவற்றிக்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இப்போது 123 மாத முதிர்வு காலத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்