வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – இனி இந்த திட்டம் கிடையாது!

வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – இனி இந்த திட்டம் கிடையாது!

ICICI வங்கி தனது வாடிக்கையாளர்கள் நல்ல பலன்களை அனுபவிக்கும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், மிகவும் பிரபலமாக இருந்த ஒரு சேமிப்பு திட்டம் இன்று முதல் இனி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு திட்டம்:

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு அதிக லாபம் தரக்கூடிய வகையிலான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் திட்டங்களை மக்கள் தேர்வு செய்து கொள்கின்றனர். அந்த வகையில், ICICI வங்கியின் golden years fixed deposit என்ற திட்டம் அதிக வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.


இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் கூட வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியானது உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ICICI வங்கியின் golden years fixed deposit திட்டத்தில் பொதுமக்களும், வயது மூத்த குடிமக்களும் சேர்ந்து கொள்ள முடியும். ஆனால், பொதுமக்களை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதலான வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மூத்த குடிமக்களுக்கு 6.60%-மும், பொதுமக்களுக்கு 6.00% வட்டியும் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் என்பது முதிர்வு காலமாகும். அதன்பிறகு 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடு 2 கோடியாக உள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் இனி புதிதாக யாரும் சேர முடியாது. அக்டோபர் 7ம் தேதியான இன்றுடன் இந்த திட்டம் முடிகிறது. ஆனால், முன்னதாக சேர்ந்துள்ள பயனர்கள் இதன் பலன்களை அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்