எல்ஐசி-யின் முத்தான திட்டங்கள்.. யாருக்கெல்லாம் பயன்.. சலுகைகள் என்ன.. இதோ முக்கிய விவரங்கள்..!

எல்ஐசி-யின் முத்தான திட்டங்கள்.. யாருக்கெல்லாம் பயன்.. சலுகைகள் என்ன.. இதோ முக்கிய விவரங்கள்..!

இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் நியாபகத்திற்கு வருவது எல்ஐசி தான். பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமானது, பல தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பல அதிரடியான திட்டங்களை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் நடப்பு ஆண்டில், எல்ஐசி-யில் உள்ள சிறந்த திட்டங்கள் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். இந்த திட்டங்களில் யாரெல்லாம் இணையலாம். எவ்வாறு இணையலாம்.

ஏன் இந்த திட்டங்கள் சிறந்தவையாக உள்ளன. மற்ற விவரங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

எல்ஐசி-யின் ஜீவன் அமர் திட்டம்
நாம் இன்று பார்க்கவிருக்கும் முதல் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் அமர் திட்டம். இந்த திட்டம் ஒரு டெர்ம் திட்டமாகும். அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையில் இந்த திட்டத்தில் காப்பீடு பெறலாம்.

இரண்டாவது எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம். இந்த திட்டமானது ஒரு எண்டோவ்மெண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் பாலிசி காலம் முடியும் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜீவன் அமர் திட்டம்- வயது தகுதி
 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும். இதில் இரண்டு வகையான மரணத்திற்கு பின்பு கையில் பணம் வரும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ, அல்லது 5, 10, 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம். இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம். ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம் இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்.

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் போனஸ் அதிகம் இருக்கும். பங்கு சந்தை அபயாங்கள் கிடைக்கும். முதிர்வு ஆண்டு வரை பிரீமியம் செலுத்த வேண்டாம். குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான சிறந்த ஆப்சன் எனலாம். இந்த பாலிசியில் விபத்து காப்பீடு மற்றும் வாழ் நாள் காப்பீடு பெற ரைடர்ஸ் பாலிசிகள் வசதி உண்டு. கட்டண பிரீமியத்திற்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். இதெ முதிர்வு தொகைக்கு 10(10டின் படி வரி சலுகையுண்டு.

ஜீவன் லாப் திட்டத்தில் வயது தகுதி

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் குறைந்தபட்சம் 8 வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும். இதே அதிகபட்ச வயதினை எடுத்துக் கொண்டால், 16 ஆண்டு பாலிசியில் 59 வயதாகும். இதே 21 ஆண்டு பாலிசியில் 54 வயது அதிகபட்சமாகும்.


ஜீவன் லாப் திட்டத்தில் காப்பீடு


எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீடு என்பது 2 லட்சம் ரூபாயாகும். இதில் அதிகபட்ச வரம்பு கிடையாது.

இந்த பாலிசியில் 16 ஆண்டுகள் எனில் 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதே 21 வருட பாலிசி எனில் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதே 25 வருட பாலிசி எனில் 16 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்
 

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம். இந்த திட்டம் ஒரு எண்டோவ்மெண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், இறப்பு பலனாக 10% SA பாலிசி முதிர்வு காலம் வரையில் கிடைக்கும். இது மாதாமாதம் ஒரு வருமானமாகவே கிடைக்கும்.
பாலிசி முதிர்வு காலம் வரும்போது முதிர்வு தொகை கிடைக்கும். (தொடர்ந்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியதில்லை)




Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்