ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த ஒரு வாரமாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று 81.90 ஆக ரூபாயின் மதிப்பு, மேலும் 32 பைசா வீழ்ச்சியடைந்து இன்று காலை 82.22 ஆக வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.87 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 

Comments

Popular posts from this blog

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்